For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

11:52 AM Nov 01, 2023 IST | Web Editor
5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி உறுதி   முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு
Advertisement

5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை திருவான்மியூரில  திமுகவின் பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
கிருஷ்ணசாமியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதன் பின்னர் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது..

இது இரு சீர்திருத்த திருமணம்.  1967க்கு முன்பு சீர்திருத்த திருமணமத்திற்கு சட்டப்படி அங்கீகாரம் இல்லை.  சீர்திருத்த திருமணம் சட்டப்படி செல்லும் என சட்டம் கொண்டு வந்தவர் பேரறிஞர் அண்ணா.  சுயமரியாதை உணர்வோடு நடைபெற்ற தமிழ் திருமணம் இது.  அதேபோல செம்மொழி அங்கீகாரம் பெற்று தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி  என்பதை மறந்து விட முடியாது.

பூந்தமல்லியின் உண்மை பெயர் பூந்தன் மல்லி என்பது தான்.  பூந்தன் என்றால் குளிர்ச்சி என்று பொருள்.  கொள்கை பிடிப்புள்ள உடன்பிறப்புகளும் பிறந்துள்ள இடம் இது.  சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி பழக இனிமை கொண்டவர் மற்றும் உறுதியானவர்.

1976 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையில் எமர்ஜன்சியை எதிர்த்தோம்.  எமர்ஜன்சியை எதிர்க்க கூடாது,  அதை மீறி எதிர்த்தால் ஆட்சி கவிழ்க்கப்படும்.  எதிர்க்காவிட்டால் ஆட்சி சில ஆண்டுகள் தொடரும் என இந்திராகாந்தியின் தூதுவர்கள் வந்து கோபாலபுரத்தில் கலைஞரிடம் சொன்னார்கள்.

அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியை கவிழ்ப்பது அல்ல.  எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையில் நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்,  நாங்கள் ஜனநாயகத்தை நம்பி இருக்கிறோம். ஆட்சி அல்ல எங்கள் உயிரே போனாலும் நாங்கள் இதற்கு சம்மதிக்கமாட்டோம் என கலைஞர் சொல்லி அனுப்பினார்

சென்னை கடற்கரையில் மக்களை கூட்டம் கூட்டி தீர்மானம் போட்டார்.  இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜன்சியை ரத்து செய்ய வேண்டும்,  மிசா சட்டத்தில் கைது செய்த தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனதீர்மானம் போட்டார்.

இதற்கு அடுத்து தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.  அந்த சூழலில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமியின்  தந்தை ஆதிசதாசிவம்,  கழுத்தில் கட்சி துண்டு அணிந்து காவல்நிலையம் முன்பே எமர்ஜன்சியை எதிர்த்து பேசி, அதற்காக கைது செய்ப்பட்டவர்.  இதன் மூலம் கிருஷ்ணசாமிக்கு திமுக மீது பற்று வந்தது.

பா.ஜ.க ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாக உள்ளது.  எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் சிறப்பான வெற்றியை வழங்க வேண்டும்.  நாட்டில் இருக்கும் நிலை உங்களுக்கு நன்றாக தெரியும்.  ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையில் தான் சூழல் உள்ளது.

எதிர்க்கட்சிகளை மிரட்டுவது,  மத்திய பாஜக ஆட்சி தனக்கு எதிராக கருத்து சொன்னாலும் அவர்களை மிரட்டுவது,  அச்சுறுத்துவது,  வருமான வரித்துறை அமலாக்கத்துறையை, ஏவுவது தற்போது தொலைபேசியை ஹேக் செய்யும் முயற்சியை கையாண்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனமே இது தொடர்பாக எச்சரிக்கை கடிதத்ததை எதிர்க்கட்சியினருக்கு வழங்கி உள்ளனர்.  இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறுகிறார்

இது என்ன கேலி கூத்து.  செய்வதையும் செய்துவிட்டு விசாரணை கமிஷனா?.  தோல்வி பயம் பாஜகவிற்கு வந்துவிட்டது.  பாஜக எதிர்பாரத வகையில் இந்தியா கூட்டணி அமைந்துவிட்டது.  மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ள கொடுமைகளை மக்களுக்கு எடுத்துச்  சொல்லி வருகிறோம்.  விரைவில் 5 மாநில தேர்தல் வர உள்ளது.  5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என தகவல் வந்துள்ளது.  இந்தியாவை காப்பாற்ற இந்தியா கூட்டணிக்கு வெற்றியை தேடித்தர வேண்டும் “ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement