For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி!

07:13 AM Jun 27, 2024 IST | Web Editor
பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி மருத்துவமனையில் அனுமதி
Advertisement

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு நேற்றிரவு திடீர் உல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர் தொடர்ச்சியாக மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே உள்ளார். 1942 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.-இல் தன்னை இணைத்துக் கொண்ட அத்வானி 1986 முதல் 1990 வரையும் பிறகு 1993 முதல் 1998 வரையும் பாஜக-வின் தேசிய தலைவராக இருந்ததோடு 2004 முதல் 2005 வரையிலான காலக்கட்டத்திலும் பாஜக-வின் தேசிய தலைவராக பதவி வகித்துள்ளார்.

மத்தியில் கிட்டத்தட்ட மூன்று முறை ஆட்சியமைக்கும் வாய்ப்பை தவறவிட்ட பாஜக 1999-இல் ஆட்சி பொறுப்பேற்ற காலக்கட்டத்தில் எல்.கே. அத்வானி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் முதல் உள்துறை அமைச்சராக தேர்வானார். பிறகு இவர் துணை பிரதமராகவும் பதவி வகித்தார். பிறகு 2009 ஆம் ஆண்டு தேர்தலில் எல்.கே. அத்வானி பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக பதவி வகித்தார்.

Tags :
Advertisement