For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பள்ளிகளில் பாஜகவின் திட்டங்கள் குறித்த போட்டி | மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்!

12:35 PM Oct 04, 2024 IST | Web Editor
பள்ளிகளில் பாஜகவின் திட்டங்கள் குறித்த போட்டி   மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ  கண்டனம்
Advertisement

பள்ளிகளில் பாஜகவின் திட்டங்கள் குறித்த போட்டிகளை நடத்துமாறு வெளியான மத்திய அரசின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில், வரும் அக்டோபர் 7 முதல் 11 வரை பல்வேறு போட்டிகளை நடத்த மத்திய அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதில், விவாதப் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள “ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத்” ஆகிய தலைப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த சுற்றறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் வரும் அக்டோபர் 7 ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்ஷ்த் பாரத் போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக/ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் இந்த முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.

இதையும் படியுங்கள் : ThirupatiLattu | சிபிஐ இயக்குநர் கண்காணிப்பில் புதிய விசாரணை குழு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல பள்ளிகளை பயன்படுத்துவது மிக ஆபத்தான மாணவர் விரோத போக்காகும். இந்த முடிவை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற தலையீடுகளை மாநில அரசு முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும், ஆசிரியர், மாணவர்களும் இதுபோன்ற முயற்சிகளை எதிர்க்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) வலியுறுத்துகிறது"

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement