"பாஜக, ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதியை கொடுக்கிறது" - அமைச்சர் சக்கரபாணி!
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்த வருடம் 3 மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18 ஆம் தேதி செறிவூட்டப்பட்ட அரிசி மத்திய அரசு அனுமதி பெறப்பட்டதாக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் மற்றும் சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராசு ஆகியோர் கூறினார். அவர்களிடம் மத்திய அரசு கொடுத்த கடிதத்தை கேட்டோம். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் 1.79 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் 2024 - 25 ஆண்டில் 47 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 2021 - 2025 தற்போது வரை 1.96 கோடி மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தவறான தகவல் கூறுகிறார். முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்புகிறார். சனல் இல்லை, சாக்கு பை இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். கொல்கத்தாவில் இருந்து சனல் மற்றும் சாக்கு கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரவுகோட்டையை சேர்ந்த பூங்கொடி என்பவர் நெல் விவசாயம் குறித்து வீடியோ எடுத்து தவறான தகவல்களை கூறியுள்ளார்.
பூங்கொடி 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார். தற்போது வரை நெல் அறுவடை செய்யவில்லை. அதிமுகவினர் தவறான தகவலை பரப்பி விவசாயிகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் 183 இடங்களில் 2 எடை மிஷின் மூலம் நெல் கொள்முதல் நடைபெறுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் குறைகளை சுட்டி காட்டலாம், தவறான தகவலை தெரிவிக்கக் கூடாது. ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் நெல் மூட்டைக்கு கூடுதல் நிதி கொடுக்கப்படுகிறது என்பது குறித்த கேள்விக்கு பாஜக ஆளுகின்ற அல்லது கூட்டணிகள் இருக்கும் மாநிலத்தின் தேவையான நிதியை கொடுக்கிறது. தமிழ்நாட்டில் கொடுப்பது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 
 
            