Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜக எம்.பி. மனோஜ் திவாரியின் வைரலாகும் நேர்காணல் சமீபத்தில் வெளியானதா? - உண்மை என்ன?

12:14 PM May 22, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Vishvas News

Advertisement

வடகிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி 4 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய நேர்காணல் வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. இந்த் வீடியோ பழையது மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியது என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏப்.19-ம் தேதி தொடங்கி 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவுற்று, தற்போது வரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

இதனிடையே, ​​வடகிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி அளித்த பேட்டியின் கிளிப் ஒன்று வைரலாகி வருகிறது.  இதில் ஏழ்மை குறித்து அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை காண முடிந்தது.  சமூக ஊடகங்களில் வைரலாகி வரும், இந்த 35 விநாடிகள் கொண்ட வீடியோவை மக்களவைத் தேர்தலுடன் தொடர்புபடுத்தி சில பயனர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

வைரலான இந்த பதிவை விஸ்வாஸ் செய்தி ஆய்வு செய்ய முடிவு செய்தது. ஆய்வின் முடிவில், இந்த வீடியோ சமீபத்தியது அல்ல எனவும், 4 ஆண்டுகளுக்கு முன்பு TV 9 Bharatvarsh செய்திக்கு மனோஜ் திவாரி வழங்கிய நேர்காணலின் 35 விநாடிகள் எடிட் செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது எனவும் கண்டறியப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு:

ட்விட்டர் (எக்ஸ்) பயனரான அசோக் குமார் பாண்டே 19 மே 2024 அன்று மனோஜ் திவாரியின் வைரல் வீடியோவை பகிர்ந்து, “திவாரி ஜி மீது மோடிஜியின் தாக்கம் உள்ளதா அல்லது இருவரும் ஒரே இடத்தில் இருந்து உணர்ச்சிகரமான நடிப்பைக் கற்றுக்கொண்டார்களா” என பதிவிட்டிருந்தார். மக்களவைத் தேர்தலின் போது இந்த வீடியோ சமீபத்திய நேர்காணல் என்று கருதி, மற்ற பயனர்களும் அதை வைரலாக்கி மனோஜ் திவாரியை குறிவைத்து வருகின்றனர்.

வைரலான இந்த வீடியோவை ஸ்கேன் செய்து விஸ்வாஸ் நியூஸ் விசாரணையைத் தொடங்கியது. அதில், TV9 செய்தியாளர் அபிஷேக் உபாத்யாய், மனோஜ் திவாரியை நேர்காணல் செய்வதைக் காணலாம். டெல்லியில் வெப்பம் இன்னும் உச்சத்தில் இருக்கும் வேளையில் அவர் குளிரை தாங்கக்கூடிய ஸ்வட்டர் அணிந்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பேட்டி பழையதாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது.

பின்னர், TV9 நிறுவனத்தின் யூடியூப் சேனலில், முக்கிய வார்த்தைகளைக் கொண்டு தேடியதில் வைரல் வீடியோவின் அசல் நேர்காணலை கண்டறிய முடிந்தது. இந்த நேர்காணல் 14 ஜூன் 2020 அன்று பதிவேற்றப்பட்டிருந்தது. அப்போது மனோஜ் திவாரி டெல்லி பாஜக தலைவராக இருந்துள்ளார்.

மேலும் விஸ்வாஸ் நியூஸ் சார்பில், பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாயை தொடர்பு கொள்ளப்பட்டது. அப்போது அவர், “வைரலாகிவரும் இந்த வீடியோ 4 ஆண்டுகள் பழையது” என உறுதிப்படுத்தினார். தொடர்ந்து தேடலின் போது, ​​19 மே 2024 அன்று செய்தியாளர் அபிஷேக் உபாத்யாய் வடகிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரியிடம் நடத்திய சமீபத்திய நேர்காணலைக் காணமுடிந்தது.

தொடர்ந்து, நான்கு ஆண்டுகள் பழமையான நேர்காணலின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை வைரலாக்கியதற்காக X Handle அசோக் குமார் பாண்டே என்பவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவர் ஒரு எழுத்தாளர் என்பதும், இவர் புதுடெல்லியில் வசிக்கிறார் என்றும், இவரை சமூக வலைதளத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள் எனவும் கண்டறியப்பட்டது.

முடிவு:

விஸ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில், வைரலாகிவரும் மனோஜ் திவாரியின் நேர்காணல் வீடியோ, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த நேர்காணலின் ஒரு பகுதி என்பதும், இது தவறாக வழிநடத்தும் செய்தி என்பதும் கண்டறியப்பட்டது.

Note : This story was originally published byVishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
BJPDelhimanoj tiwariNarendra modiNews7Tamilnews7TamilUpdatesPMO India
Advertisement
Next Article