For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராஜஸ்தான் முதலமைச்சர் பதவி யாருக்கு? இன்று மாலை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்!

01:54 PM Dec 12, 2023 IST | Web Editor
ராஜஸ்தான் முதலமைச்சர் பதவி யாருக்கு  இன்று மாலை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்
Advertisement

ராஜஸ்தானில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

Advertisement

ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று,  அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு இன்னும் விடைகிடைக்காத நிலையில்,  இன்று மாலை 4 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது.  ஒருவேளை,  இன்று நடைபெறும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்ற ரகசியம் உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக மாநில பொதுச் செயலாளர் மற்றும் எம்எல்ஏவான பஜன்லால் ஷர்மா இது பற்றி கூறுகையில்,  கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம்,  தலைமை அலுவலகத்தில்,  பாஜக பார்வையாளரும் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் மற்றும் இரண்டு பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும்.  இந்த கூட்டத்தில் புதிய முதல்வர் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

இதையும் படியுங்கள்: தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

முன்னதாக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே கடந்த புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை புதுடெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்துள்ளார்.  ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் 115 இடங்களைக் கைப்பற்றி, பாஜக வெற்றி பெற்றது.

அங்கு ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு 69 இடங்களே கிடைத்தன.
ராஜஸ்தானில் புதிய முதல்வர் யாரென்ற கேள்வி நீடித்து வரும் நிலையில்,  முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவை பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர். இந்த மாநிலத்தில் முதல்வர் தேர்வுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட 3 பார்வையாளர்களை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.

Tags :
Advertisement