For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

KIIT மாணவர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியின் தந்தை என வைரலாகும் பாஜக தலைவரின் படம் - உண்மை என்ன?

KIIT மாணவர் உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவின் தந்தை இவர்தான் என்ற கூற்றுடன் பாஜகவைச் சார்ந்தவரின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
08:54 PM Feb 25, 2025 IST | Web Editor
kiit மாணவர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியின் தந்தை என வைரலாகும் பாஜக தலைவரின் படம்   உண்மை என்ன
Advertisement

This News Fact Checked by ‘Boom’ 

Advertisement

ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT) பல்கலை/ விடுதியில் நேபாள மாணவர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவின் தந்தை இவர்தான் என்ற கூற்றுடன் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படம் பிரதான குற்றவாளியான ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவின் தந்தை மனோஜ் ஸ்ரீவஸ்தவா என்றும், பிரதமர் நரேந்திர மோடி முதல் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வரை அனைவருடனும் அவருக்கு தொடர்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.

 வைரல் போஸ்ட் தொடர்பாக BOOM  விசாரித்ததில் அந்த வைரல் கூற்று தவறானது என்பதைக் கண்டறிந்தது. புவனேஸ்வர் இன்ஃபோ சிட்டி காவல் நிலைய பொறுப்பாளர் மகேந்திர குமார் சாஹு, பூம் உடனான உரையாடலில் இதை மறுத்தார். இது தவிர, வைரல் படங்களில் காணப்பட்ட மனோஜ் ஸ்ரீவஸ்தாவின், மகனின் பெயர் அக்ஷத் என்றும், அவர் அயோத்தியில் ஒரு தொழிலதிபர் என்றும் பூமிடம் கூறினார்.

KIIT-யில் நேபாள மாணவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தது தொடர்பாக இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பிரதான குற்றவாளியான பொறியியல் மாணவர் ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவும் அடங்குவார்.  அவர் பாதிக்கப்பட்டவரை தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்.

பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் சில படங்களை பகிர்ந்து ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவின் தந்தை மனோஜ் ஸ்ரீவஸ்தவா ஒரு பாஜக தலைவர் என்றும், உத்தரபிரதேச முதல்வர் யோகி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் எழுதினார். மேலும், பாஜக தலைவரின் மகனே மாணவனை தற்கொலைக்குத் தூண்டியதால், ஊடகங்கள் பாஜக தலைவரின் மகனைப் பாதுகாக்கின்றன என்றும் அவர் எழுதினார். 

உண்மைச் சரிபார்ப்பு :

நேபாள மாணவர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவின் தந்தையின் கூற்றுடன் கூடிய புகைப்படங்களின் தொகுப்பு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் கூற்று தவறானது என்று BOOM கண்டறிந்தது. இதை புவனேஸ்வர் காவல்துறையுடனும், புகைப்படங்களில் காணப்படும் நபருடனும் சரிபார்த்துள்ளோம். ஒடிசாவில் உள்ள ஒரு உள்ளூர் பத்திரிகையாளரை பூம் தொடர்பு கொண்டபோது, ​​அவர் காவல்துறை கைது அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவரின் முழுப் பெயர் ஆத்விக் மனோஜ் ஸ்ரீவஸ்தா என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவரது பெற்றோரைப் பற்றி வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். வைரல் படங்களில் காணப்படும் நபர் தன்னை அயோத்தியைச் சேர்ந்த பாஜகவின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் என தெரியவந்துள்ளது.  இதிலிருந்து நாம் மனோஜ் ஸ்ரீவஸ்தவாவின் பேஸ்புக் சுயவிவரத்தை ஆய்வு செய்தோம். 

மனோஜ் ஸ்ரீவஸ்தவாவின் பேஸ்புக் சுயவிவரத்தின் அடிப்படையில் அவர் தன்னை பைசாபாத்தில் உள்ள அயோத்தியில் வசிப்பவர் என்று குறிப்பிட்டுள்ளார். இதனுடன், பாஜகவைச் சேர்ந்த அயோத்தியின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் பதவியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, நாங்கள் மனோஜ் ஸ்ரீவஸ்தவாவைத் தொடர்பு கொண்டோம், அவர் இந்த வைரல் கூற்று முற்றிலும் தவறானது என்று கூறினார். "எனக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறான், அவன் பெயர் அக்ஷத் ஸ்ரீவஸ்தவா, அவன் அயோத்தியில் ஒரு ஸ்கூட்டி ஷோரூம் வைத்திருக்கிறான்," என்று அவர் பூமிடம் கூறினார்.

தனது தந்தை கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவில் உறுப்பினராக இருப்பதாகவும், பல தலைவர்களுடன் புகைப்படங்களை வைத்திருக்கும் பேஸ்புக் பக்கத்தையும் நடத்தி வருவதாகவும் அக்ஷத் ஸ்ரீவஸ்தவா பூம் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தையின் பெயரும் மனோஜ் என்பதால், அவரது புகைப்படங்களை மக்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் உறுதிப்படுத்த, புவனேஸ்வரில் உள்ள இன்ஃபோ சிட்டி காவல் நிலைய அதிகாரி மகேந்திர குமார் சாஹுவை நாங்கள் தொடர்பு கொண்டோம், அவர் வைரல் கூற்றை மறுத்து, வைரல் புகைப்படங்களில் காணப்படும் நபர் குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை அல்ல என்று கூறினார். குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தையின் விவரங்களை BOOM சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை, இருப்பினும், வைரலான புகைப்படத்தில் உள்ள மனோஜ் ஸ்ரீவஸ்தவா குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடர்புடையவர் அல்ல என்பது எங்கள் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது.

Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement