Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெருமாளை அவமதிக்கும் வகையில் பாடல்... நடிகர் சந்தானம் மீது பாஜக வழக்கறிஞர்கள் புகார்!

நடிகர் சந்தானம் மீது பாஜக வழக்கறிஞர்கள் புகார்...
01:58 PM May 12, 2025 IST | Web Editor
நடிகர் சந்தானம் மீது பாஜக வழக்கறிஞர்கள் புகார்...
Advertisement

நடிகர் சந்தானம் மீது பாஜக வழக்கறிஞர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரில், சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாளை அவமதிக்கும் விதமாக பாடல் இடம் பெற்றுள்ளது. இதனால் அந்த படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

சந்தானம் நடித்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதை பிரேம்ஆனந்த் இயக்கி இருந்தார். இதன் தொடர்ச்சியாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படம் உருவாகியுள்ளது. இதில் சந்தானத்துடன், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர்.

தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர்கள் ஆர்யா, சந்தானம் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் கதை சொகுசு கப்பலில் தொடங்கி, தீவு ஒன்றில் நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.

Tags :
BJPcomplainDD Next levelsanthanam
Advertisement
Next Article