மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11:30 AM Oct 19, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல், வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
அதன்படி, தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், தென்காசி, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம், அரியலூர் ஆகிய 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.