Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பாஜக செயல்படுகிறது" - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

06:13 PM Jun 30, 2024 IST | Web Editor
Advertisement

இட ஒதுக்கீட்டின் அடிப்படை கருத்தியலுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை மக்களின் கல்வி நிலையை சுட்டிக்காட்டி, விளிம்புநிலை மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்  விமர்சித்துள்ளார்.  இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்ததாவது...

''பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினத்தோர், முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டில் பாசாங்கு வேலையைச் செய்கிறது. கல்வி நிலையங்களில் உள்ள பணியிடங்களை பிரதிநிதித்துவப்படுத்து நபர்களின்  எண்ணிக்கையில் மேற்சொன்ன சமூகத்தினர் குறைவாகவே உள்ளனர்.

இதையும் படியுங்கள் : “அடுத்த வாரத்திலிருந்து நான் வேலையில்லாத நபர்.. ஏதாவது வேலை கிடைக்குமா?” – ராகுல் டிராவிட் பேச்சால் சிரிப்பலை!

இந்த சமூகத்தை சார்ந்த யாரேனும் ஒருவர் கூட துணை வேந்தர்களாக இல்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 15 சதவீதத்துக்கும் குறைவான பணியாளர்களே இச்சமூகத்தைச்  சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு சாதகமாக எதையும் பாஜக செய்யவில்லை. இடஒதுக்கீட்டின் அடிப்படைகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது''

இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

Tags :
Akhilesh YadavBJPfundamental valueReservationSamajwadi Party
Advertisement
Next Article