Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காலையில் பாஜக.. மாலையில் #Congress! - கட்சித் தாவிய முன்னாள் எம்.பி!

08:07 PM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

ஹரியானா சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் பாஜகவில் இருந்த முன்னாள் எம்.பி ஒருவர் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

Advertisement

அரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அங்கு புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. வருகிற 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது. 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில், முன்னாள் எம்.பி. அஷோக் தன்வார் பாஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இன்று காலையில் பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு, அடுத்த 2 மணி நேரத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் முன்னாள் எம்.பி. அஷோக் தன்வார் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இவர் 4 முறை வெவ்வேறு கட்சிகளுக்கு தாவியுள்ளார்.

2019ல் காங்கிரசில் இருந்து விலகி, 2021ல் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். பின்பு அடுத்த ஆண்டே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி ஆம் ஆத்மி கட்சிக்கு தாவினார். அதன் பிறகு அங்கிருந்து பாஜகவுக்கு சென்ற அவர், 2024 தேர்தலில் போட்டியிட்டு தோல்வி பெற, பாஜகவில் இருந்து விலகி தற்போது மீண்டும் காங்கிரசுக்கே திரும்பியுள்ளார்.

Tags :
Ashok TanwarCongressRahul gandhi
Advertisement
Next Article