Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜக கூட்டணியில் பாமக? டெல்லி செல்லும் அன்புமணி ராமதாஸ்!..

06:27 PM Mar 10, 2024 IST | Web Editor
Advertisement

பாஜகவுடன் கூட்டணியில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று அல்லது நாளை டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

வேட்பாளர் பட்டியலையும் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தீவிரமடைந்து வருகின்றன. கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக உடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அல்லது நாளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் கூடுதல் இடங்களை ஒதுக்க இருப்பதால் பாமக, பாஜகவுடன் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் கேட்கும் பாமகவிற்கு வடமாவட்டங்களில் கேட்கும் இடம் ஒதுக்க முன்வராததால் பாமக நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை வெளிப்படையாக பாமக கூறாத நிலையில், இந்த திடீர் மாற்றம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ADMKAnbumani RamadossBJPElection2024Parlimentary ElectionPMK
Advertisement
Next Article