"பாஜக எதிர்க்கட்சிகளை பேசவே அனுமதிப்பதில்லை" - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது, "மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனை தான் இந்த தொகுதி மறு சீரமைப்பு. கட்சி வேறுபாடுகளை களைந்து இந்த விவகாரத்தில் அனைவரும் போராட வேண்டும், மாநிலங்களவையில் எல்லை நிர்ணயத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் பேசியவர், பாஜக எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை, அவர்கள் நினைப்பதையே முடிவாக அறிவிக்கிறார்கள். இது தொடர்பான நடவடிக்கைகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.