For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்! அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவு!

04:12 PM Nov 03, 2023 IST | Web Editor
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்  அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவு
Advertisement

தென்காசி மாவட்டத்தில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தாக தொடரப்பட்ட வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீடு முன் வைக்கப்பட இருந்த கொடிக் கம்பத்தை அகற்றும் போது,  மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்தியதாக பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மற்றும் பாஜக-வை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இதை போல,  செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய வழக்கிலும் அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்தனர்.

மேலும்,  சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின் போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கிலும் நுங்கம்பாக்கம் போலீசார் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர்.

இதேபோல,  என் மண் என் மக்கள் பாதயாத்திரை தென்காசி மாவட்டத்தில் நடந்த போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமர்பிரசாத் ரெட்டி  மீது ஆழ்வார்குறிச்சி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.  இந்த வழக்கிலும் போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்று சென்னையில் இருந்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு பேருந்திலேயே அமர் பிரசாத் ரெட்டி அழைத்துச் செல்லப்பட்டார்.  இன்று(நவ. 3) அதிகாலை 3 மணியளவில் அம்பாசமுத்திரம் கிளைச் சிறைச்சாலையில் அவரை அடைத்தனர்.

இன்று நண்பகல் 12 மணியளவில் மழை பெய்த நிலையிலும் கிளைச்சிறையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரமுள்ள நீதிமன்றத்திற்கு  அழைத்துச் சென்று அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பல்கலைச்செல்வன் முன்பு அமர் பிரசாத் ரெட்டியை ஆஜர்படுத்தினர்.  இந்த வழக்கில் நீதிபதி பல்கலைச் செல்வன், அமர் பிரசாத் ரெட்டியை ஜாமீனில் விடுவிப்பதாக அறிவித்தார்.

அமர்பிரசாத் ரெட்டி அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதையடுத்து அந்தப் பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் முன்பு திரண்ட பாஜக தொண்டர்கள் அமர் பிரசாத் ரெட்டிக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர்.  இதனால் அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Tags :
Advertisement