மதுரை முனியாண்டி கோயிலில் ’சமத்துவ விருந்து’ - 20000 பேருக்கு பிரசாதமாக வழங்கபட்ட பிரியாணி!
மதுரை முனியாண்டி கோவில் 90-வது ஆண்டு பிரியாணி திருவிழாவில் பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம் வழங்கபட்டது.
12:58 PM Jan 25, 2025 IST | Web Editor
Advertisement
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியாண்டி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாம் சனிக்கிழமையில் ’சமத்துவ விருந்து’ நடைபெறும். இதில் ஆடு கோழிகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள்.
Advertisement
இதில் பக்தர்கர்களின் நேர்த்திக்கடனாக 200 ஆடுகளையும், கோழிகளையும் மற்றும் சுமார் 2500 கிலோ பிரியாணி அரிசி கொண்டு பிரியாணி சமைத்தனர். இதில் 20,000 மேற்பட்ட கிராம மக்களுக்கு பிரசாதமாக வழங்கினார்கள்.
இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி,வில்லூர்,அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் பிரியாணியை பெற்றுச் சென்றனர். இந்த திருவிழாவில் வேண்டுதல் பலிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.