Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் - கேக் வெட்டி, அன்னதானம் வழங்கி கொண்டாடிய இளைஞர்கள்!

07:33 AM May 02, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளையின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாடி, மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Advertisement

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத் தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அலங்காநல்லூர் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகின்றனர். இந்த காளையை அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்த பூசாரி லோகு (35) பராமரித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்றுடன் இந்த காளைக்கு 7 வயதை எட்டிய நிலையில் இளைஞர்கள் அனைவரும் முனியாண்டி கோயிலில் சிறப்பு பூஜை செய்து காளைக்கு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கி கொண்டாடினர்.

இதுகுறித்து பூசாரி லோகு கூறுகையில்,

“ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர்களும் பங்கேற்று பெற்றுத்தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் இந்த ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறோம். இந்த காளைக்கு காரி (எ) கரிகாலன் என பெயர் சூட்டி ஆண்டுதோறும் மே 1-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடி வருகிறோம்.

காளை 7 வயதை எட்டியுள்ளது. எனது வீட்டில் ஒரு பிள்ளையைப் போல் வளர்த்துவரும் காளைக்கு மனிதர்கள் எவ்வாறு பிறந்தநாள் கொண்டாடுகிறோமோ, அதேபோன்று கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி பிறந்தநாள் கொண்டாடி வருகிறோம்” இவ்வாறு தெரிவித்தார்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி,
அன்னதானம் வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
BirthdayCelebrationjallikattu kaalaiMadurai
Advertisement
Next Article