For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குமரன்குன்று முருகன் கோயில் மலைப்பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்ட பறவைகள்... போலீசார் விசாரணை!

10:16 AM Aug 26, 2024 IST | Web Editor
குமரன்குன்று முருகன் கோயில் மலைப்பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்ட பறவைகள்    போலீசார் விசாரணை
Advertisement

மேட்டுப்பாளையம் அருகே குமரன்குன்று கோயில் மலைப்பகுதியில் உணவில் விஷம் வைத்து மயில் உள்ளிட்டவை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமரன்குன்று பகுதியில் பழமை
வாய்ந்த அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் மலைகுன்றின் மேல் அமைந்துள்ளது. இக்கோயில் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் கோயிலைச் சுற்றி மயில், மைனா, சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவை வகைகள் வாழ்ந்து வருகின்றன.

அது மட்டுமல்லாமல் இந்த மலையைச் சுற்றி, பொதுமக்கள் கால்நடை வளர்ப்பிலும்
ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதை
பகுதியில், மர்ம நபர்கள் அசைவ பிரியாணியில் விஷத்தை கலந்து பல்வேறு
இடங்களில் தட்டுகளில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனை சாப்பிட்ட மயில், மைனா உள்ளிட்ட பறவைகள் பல்வேறு இடங்களில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்தப்பக்கம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளும் இந்த விஷ உணவை உட்கொண்டு இறந்துள்ளன. இதனையடுத்து இதுகுறித்து அப்பகுதி மக்கள் காரமடை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த காரமடை வனத்துறையினர் உயிரிழந்த பறவைகளின் உடல்களையும், விஷம் கலக்கப்பட்ட உணவையும் ஆய்விற்காக கொண்டு சென்றனர். பறவைகளை கொல்ல விஷம் வைத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயிலை சுற்றி மயில் மற்றும் பறவைகள் உயிரிழந்த சம்பவம் பெரும்
அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement