Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பில்கிஸ் பானு வழக்கு | குற்றவாளிகள் இருவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

12:38 PM Jul 19, 2024 IST | Web Editor
Advertisement

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளில் இருவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.  

Advertisement

2002 குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு,  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.  3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், இந்த கொலை வழக்கில் 11 பேரை குற்றவாளிகளாக மும்பை உயர்நீதிமன்றம் அறிவித்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் பாஜக அரசு விடுவித்தது.  குற்றவாளிகள் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கீஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

அவர்களின் விடுதலையை ரத்து செய்யக் கோரி பலர் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்தனர்.  பில்கிஸ் பானு மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் 2002 கலவரத்தின் போது நிகழ்த்தப்பட்ட  குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 கைதிகளை முன்கூட்டியே விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 8 ஆம்  தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் இரண்டு வாரத்திற்குள் சிறை அதிகாரிகள் முன்பு சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் மாநிலம் பஞ்சமஹாலில் உள்ள கோத்ரா சிறையில் ஜனவரி 21 ஆம் தேதி இரவு சரணடைந்தனர்.

இதனையடுத்து, பில்கிஸ் பானு வழக்கில் தங்கள் விடுதலையை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, ரமேஷ் ரூபாபாய் சந்தனா, ராதேஷியாம் பகவான்தாஸ் ஷா, ராஜுபாய் பாபுலால் சோனி ஆகியோர்  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த சூழலில்,  ராதேஷியாம் பகவான்தாஸ் ஷா, ராஜுபாய் பாபுலால் சோனி ஆகியோர் தங்களை விடுவிக்கக்கோரிய மனு மீது முடிவெடுக்கும் வரை, தங்களை இடைக்கால ஜாமினில் விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  அந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "இந்த மனு எவ்வாறு விசாரணைக்கு உகந்தது என கூற முடியும்? இதில் எங்கு அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது? ஏன் அரசியலமைப்பு சட்டம் 32ன் கீழ் மனு தாக்கல் செய்துள்ளீர்கள்?" என கேள்வி எழுப்பினர்.  இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்து மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து விட்டனர்.

Tags :
BailBilkisBanoBilkisbano CaseGujaratSupreme courtvictim
Advertisement
Next Article