For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#BiharByElection | பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் நிலை என்ன?

04:26 PM Nov 23, 2024 IST | Web Editor
 biharbyelection   பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் நிலை என்ன
Advertisement

பீகாரில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

Advertisement

பீகார் மாநிலத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ராம்கார், தராரி, பெலகஞ்ச் மற்றும் இமாம்கஞ்சு ஆகிய 4 தொகுதிகளுக்கு கடந்த நவ.10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவ.23) நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : மகாராஷ்டிரா தேர்தல் – சியோன் கோலிவாடா தொகுதியில் தமிழ்செல்வன் முன்னிலை!

பீகாரில் புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கும் பிரபல அரசியல் ஆலோசகர் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டது. பிற கட்சிகளை வெற்றி அடைய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் தனது கட்சியை நிச்சயம் வெற்றி பெற செய்வார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. பீகாரில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

Advertisement