பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டபேரவைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஜுன் 24 அன்று இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்கு எதிர் கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையமானது பீகார் SIRன் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இது குறித்து நேற்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், ”பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1, 2025 ( இன்று) அன்று வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நேரடி மற்றும் டிஜிட்டல் வடிவத்தில் வழங்கப்படும். இன்று முதல், வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை இணையத்தளத்தில் சரிபார்க்க முடியும். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்தல், நீக்குதல் மற்றும் ஆட்சேபனைகள் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள விரும்புவோர் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 1 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது ஒரு வரைவு பட்டியல் ஆகும். இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30 அன்று வெளியிடப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக பீகாரில் 2003ல் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைப்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு பீகாரில் தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வருகிறத என்பது குறிப்படத்தக்கது.