பீகார் தேர்தல் : 202 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்த தேசிய ஜனநாயக கூட்டணி
பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் உள்ளடங்கிய இந்தியா கூடணிக்கும் கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும் மீதமுள்ள 122 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த11-ம் தேதி 2-வது கட்டமாகவும் வாக்கு பதிவு நடைபெற்றது. அதில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதனை தொடர்ந்து நேற்று பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. தொடக்கம் முதலே முன்னிலை பெற்று வந்த தேசிய ஜனநாயக கூட்டணி, 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
மறுபுறம் இந்தியா கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள், சுயேட்சைகள் 6 தொகுதிகளை கைப்பற்றின. தேர்தலில் தேசிய கூட்டணி வெற்றிபெற்றதை தொடர்ந்து பீகார் முதலமைச்சராக நிதீஷ் குமார் மீண்டும் பதவியேற்க உள்ளார்.