Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிகார் : 2 ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு!

பீகாரில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
06:27 PM Nov 09, 2025 IST | Web Editor
பீகாரில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
Advertisement

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே நவம்பர் மாதம்  6,11 ஆகிய தேதிகளில் என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் இரு கட்டங்களாக பதிவான வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

Advertisement

அதன்படி கடந்த 6 ஆம் தேதி  121 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சுமார்  65.08 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தை அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கிருந்தனர். அதன் படி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும்,  இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் செய்தனர். மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள், பேரணி என தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

இந்த நிலையில் இறுதி நாளான இன்று உச்சக்கட்ட பிரசாரம் நடந்தது. பல்வேறு முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

Tags :
BiharbiharelctionBJPcampaignconggresslatestNewsmodinithish KumarRahulGandhiTejaswiYadav
Advertisement
Next Article