For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுகவில் மிகப்பெரிய மாறுதல்கள் - 4 மாவட்டங்களில் புதிதாக நிர்வாகிகள் நியமனம்!

திமுகவில் புதிதாக 4 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
07:20 PM Feb 13, 2025 IST | Web Editor
திமுகவில் மிகப்பெரிய மாறுதல்கள்   4 மாவட்டங்களில் புதிதாக நிர்வாகிகள் நியமனம்
Advertisement

2026 சட்டபேரவை தேர்தலை சந்திக்க தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள்  தங்கள் கட்சியில் உள்ள தொண்டர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கட்சி பொறுப்பு வழங்குவதில் மிகப்பெரிய மாறுதல்களை திமுக செய்துள்ளது.

Advertisement

அதன்படி 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் மற்றும்  4 மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களை குறி வைத்து ஈரோட்டில் முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு. இது அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவரும், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்து எம்எல்ஏ ஆனவருமான லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு கூடுதல் பிரதிநித்துவமாக திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்கு அப்துல் வஹாப்பும், விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கு செஞ்சி மஸ்தானும் மாவட்டச் செயலாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரியில் படுகர் சமூகத்திற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கே.எம்.ராஜூ புதிய மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர்களுக்கு பிரதிநித்துவம் அளிக்கும் வகையில் திருப்பூர் மேயர் தினேஷ் இரண்டு தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூரில் பட்டியலின சமூகத்திற்கு பிரதிநித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ்ராஜ் ஒன்றியச் செயலாளராக உள்ளார். தஞ்சாவூரில் வெள்ளாளர் சமூகத்தைச் சார்ந்த பழனிவேலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள், மாற்றுகட்சியில் இருந்து வந்தவர்கள், இஸ்லாமிய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம், பட்டியலின மக்களுக்கான பிரதிநிதித்துவம் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
Advertisement