For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முனைவர் பட்டம் பெறும் போது ஆளுநரிடம் புகார் | #BharatiyarUniversity பட்டமளிப்பு விழா மேடையில் திடீர் பரபரப்பு!

02:21 PM Oct 14, 2024 IST | Web Editor
முனைவர் பட்டம் பெறும் போது ஆளுநரிடம் புகார்    bharatiyaruniversity பட்டமளிப்பு விழா மேடையில் திடீர் பரபரப்பு
Advertisement

கோவையில் பட்டமளிப்பு நிகழ்வில் ஆளுநரிடம் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் மேடையிலேயே புகார் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது, பி.எச்டி பட்டம் பெற்ற பிரகாஷ் என்பவர், பட்டம் பெற்று கொண்டு, பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக ஆளுநரிடம் எடுத்துக்கூறி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்தவர் ஆர்.பிரகாஷ். இவர் ஆங்கில மொழிப் பாடத்தில் இன்று முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்துக்கான சான்றிதழை அவர் பெற்றுக் கொண்டு, ஆளுநரிடம் சில புகார்களை எடுத்துக் கூறினார். பிஎச்.டி. பட்டம் வழங்க வேண்டுமானால் நகை, பணம் கொடுக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் வற்புறுத்துவதாகவும், பேராசிரியர்கள் சிலர், சாதிரீதியாக பாகுபாடு பார்ப்பதாகவும் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநரிடம் பிரகாஷ் புகார் அளித்ததை அதனை அங்கிருந்த பேராசிரியர்கள் சிலர் தடுத்தனர். ஆனால், அவர்களைத் தாண்டி, முனைவர் பட்டம் பெற்ற மாணவர் பிரகாஷ் புகார் அளித்தார்.

இதையும் படியுங்கள் : கொரோனா தடுப்பூசிக்கு எதிரான மனு தள்ளுபடி | உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முனைவர் பட்டம் பெற்ற மாணவர் பிரகாஷ் புகாரில் தெரிவித்துள்ளதாவது :

  1. பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள சில வழிகாட்டிகள் ஆராய்ச்சி மாணவர்களை ஆராய்ச்சி மாணவர்களாக கருதுவதில்லை, கல்விப் பணிகளைத் தவிர, ஆராய்ச்சி மாணவர்கள் சில வழிகாட்டிகளின் வீட்டில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
  2. பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆதி திராவிடர் விடுதிகள் உள்ளன, ஆனால் அது பொது விடுதியாக நடத்தப்படுவதால், ஆதி திராவிட (பட்டியலின சாதி) ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் மாதாந்திர மெஸ் கட்டணம் செலுத்துவதில் பெரும் சுமை உள்ளது.
  3. வைவா நேரத்தில், ஆராய்ச்சி அறிஞர்கள் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய சில வழிகாட்டிகள் அறிவுறுத்துகிறார்கள்
  4. .இதுமட்டுமின்றி, சில வழிகாட்டிகளின் நிர்ப்பந்தத்தால், வைவா வாய்ஸ் தேர்வை வெற்றிகரமாக முடித்த பின், ஆராய்ச்சி அறிஞர்கள், துறையில் உள்ள பணம், உணவு சில வழிகாட்டிகளுக்கு வழங்குகின்றனர்.
  5. பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் ஆண்டுக்கு ரூ.75 லட்சம் மற்றும் அதற்கு மேல் ரூ. 75 லட்சம், விடுதி பராமரிப்புக்கு ஒதுக்குகிறது. ஆனால், ஒதுக்கப்பட்ட பணம், விடுதி பராமரிப்புக்கு முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் விடுதி பராமரிப்புக்கான பணம் ஒவ்வொரு விடுதிக் மாணவர்களிடமிருந்து மாதாந்திர மெஸ் கட்டணம் மூலம் வசூலிக்கப்படுகிறது.
  6. பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக விளையாட்டு தினம் நடத்தப்படவில்லை. ஆனால் விளையாட்டுக்கான பணம் ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது.
  7. பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மைதானத்தை பயன்படுத்தக் கூடாது என கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே மைதானத்தை வெளியாட்கள் வார இறுதி நாட்களில் வாடகைக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
  8. இதனால், இதுபோன்ற பல பிரச்னைகள் உள்ளன. மேற்கண்ட பிரச்சனைகளுக்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
  • இவ்வாறு முனைவர் பட்டம் பெற்ற மாணவர் பிரகாஷ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
Tags :
Advertisement