Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆனந்த் அம்பானிக்கு எம்.எப்.ஹூசைன் ஓவியத்தை பரிசளித்த நண்பர்! வைரலாகும் புகைப்படம்!

02:04 PM Apr 12, 2024 IST | Web Editor
Advertisement

ஆனந்த் அம்பானியின் பிறந்தநாளுக்கு அவரது நண்பர் பாரத் மெஹ்ரா வழங்கிய பரிசு இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Advertisement

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 29வது பிறந்தநாளை ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாடினார்.  மும்பையின் ஜாம்நகரில் மிகப்பிரம்மாண்டபமாக கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் சல்மான் கான்,  ஷிகர் பஹாரியா மற்றும் மீசான் ஜாஃப்ரி உள்ளிட்ட பிரபலங்களும், அதே போல் பிரபல பாடகர் பி பிராக்கும் இந்த சிறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் ராதா மீரா அறக்கட்டளையின் தலைவரும்,  சமூக சேவகருமான பாரத் மெஹ்ரா ஆனந்த் அம்பானிக்கு தனித்துவமான பரிசு ஒன்றை வழங்கினார்.  ஓவிய கலைஞர் எம்.எஃப். ஹுசைனால்(MF Hussain) வரையப்பட்ட மயக்கும் விநாயகர் ஓவியத்தை ஆனந்த் அம்பானிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.  இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த புகைப்படம் வைரலான நிலையில் பல்வேறு சமூக வலைத்தள பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Tags :
Anant AmbaniBharat MehraBirthdayGiftinstagrampaintingViral
Advertisement
Next Article