திருமண புரோக்கராக மாறிய பானிபூரி விற்பனையாளர்... எப்படி தெரியுமா?
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் பூமியில் உள்ள பொது மக்கள் தங்களுக்கான சரியான பொருத்தத்தைக் கண்டுபிடிக்க மிகுந்த முயற்சி செய்கிறார்கள். அந்த வகையில், பெங்களூருவில் பானி பூரி விற்பனையாளரிடம் பெண்கள் தங்களது மகள்களுக்கு மணமகனை கண்டுபிடிக்க உதவி கேட்டு அணுகி உள்ளனர்.
இதையும் படியுங்கள் : WPL 2024 : குஜராத் அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது உ.பி. வாரியர்ஸ்!
பெங்களூருவில் பானி பூரி விற்பனையாளர் வாலா. அவரிடம் பானி பூரி சாப்பிட பெண் வாடிக்கையாளர்கள் வந்துள்ளனர். அப்போது, இவர் இந்த பெண் வாடிக்கையாளர்களின் மகள்களுக்கு மணமகனை தேடுவதை பற்றி தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். பானி பூரி விற்பனையாளர் வாலா கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில், இங்கிருந்து இந்த பெண்கள் திரும்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து, அங்கு இருந்த மற்றோரு வாடிக்கையாளர் பிரகிருதி என்பவர், பானி பூரி விற்பனையாளரிடம் அந்த பெண்கள் பேசியதை பற்றி கேட்டறிந்தார். தங்களுடைய மகள்களுக்கு மணமகன் கண்டுபிடிப்பதற்கு உதவ செய்யுமாறு இந்த பெண்கள் தன்னிடம் கேட்டதாக அந்த பானி பூரி விற்பனையாளர் வாலா கூறினார். மேலும், இந்த பானி பூரி விற்பனையாளர் தனது வாடிக்கையாளர்களிடம் மணமகனை பற்றி பேசிதாகவும், அவர் மாதம் 1.2 லட்சம் சம்பாதிக்கும் மென்பொருள் பொறியாளர் என்பதை அறிந்ததாகவும் கூறினார்.
இங்கு நடைபெற்ற இந்த சம்பவத்தை பற்றி பிரகிருதி என்பவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அனைவரின் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இந்த பதிவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வரும் நிலையில், இந்த பதிவு சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Now bhaiya conveyed this to the aunty and turns out the guy in question is a Muslim. So, they’ve apparently refused to consider him as an option (like they had many to begin with lol)
— Prakriti (@prakritea17) February 28, 2024