Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உஷாரா இருங்க மக்களே... இதை மட்டும் பண்ணிடாதீங்க... சென்னையில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்!

சென்னையில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
09:41 AM Mar 23, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை எண்ணூர் அருகே எர்ணாவூர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர்  முகுந்தன். இவர் ஆட்டோ மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவரக்கு  அனிதா (வயது 14) என்ற மகள் இருந்தார். அனிதா அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அனிதா நேற்று (மார்ச் 22) இரவு தனது வீட்டில் செல்போன் சார்ஜரை ஈர கையோடு பிடுங்கினார்.

Advertisement

அப்போது அனிதா மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அனிதாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அனிதா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் இச்சம்பவம் குறித்து பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சார்ஜரில் இருந்து செல்போனை கலட்டியபோது மின்சாரம் பாய்ந்து 10 ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சார்ஜர் ஏறும்போது செல்போனில் பேசும்போதும், பயன்படுத்தும்போதும் மின்சாரம் பாயும் அபாயம் இருப்பதால் அவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுவது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது, ஈர கைகளால் செல்போன் உள்ளிட்ட மின்சார உபகரணங்களை தொடுவதை தவிர்க்க வேண்டும் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
cell phoneChargerChennaiEnnorehospitalmobilenews7 tamilNews7 Tamil UpdatesPolice
Advertisement
Next Article