For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியல் வெளியீடு...

08:25 PM Feb 28, 2024 IST | Web Editor
இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியல் வெளியீடு
Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  

Advertisement

இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில்,  நடப்பு ஆண்டுக்கான (2023-2024) இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்ததத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெறும் இந்திய வீரர்களுக்கு ரூ.7 கோடி ஊதியம் நிர்ணயம். ஏ பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊதியம். பி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊதியம், சி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.1 கோடி ஊதியம்  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
பிரிவு A+ (ரூ.7 கோடி) ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா. பிரிவு A (ரூ.5 கோடி) ஹர்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, சிராஜ், சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல்.
பிரிவு B (ரூ.3 கோடி) சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் மற்றும் ஜெய்ஸ்வால். பிரிவு C (ரூ.1 கோடி) ரிங்கு சிங், திலக் வர்மா, ருத்துராஜ் கெய்வாட், ஷர்துல் தாக்கூர், ரவி பிஸ்னாய், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத், ப்ரசித் கிருஷ்ணா, ஆவேஸ் கான், ரஸத் படிதார்.(BCCI)
Tags :
Advertisement