For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு: ஐ.ஜி.பிரமோத்குமாருக்கு கோவை நீதிமன்றம் பிடிவாரண்டு!

10:20 AM Oct 26, 2023 IST | Student Reporter
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு  ஐ ஜி பிரமோத்குமாருக்கு கோவை நீதிமன்றம் பிடிவாரண்டு
Advertisement
திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி நிதி  நிறுவனம் மோசடி வழக்கில், ஐ.ஜி.பிரமோத்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு இரு மடங்கு லாபம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டனர்.  இந்த மோசடி வழக்கில் அந்த நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்ட  இயக்குநர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அப்போதைய மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரமோத்குமார்,  டிஎஸ்பி ராஜேந்திரன்,  ஆய்வாளர் மோகன்ராஜ் மற்றும் பிரபாகரன், செந்தில்குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.  இந்த வழக்கு கோவை மாவட்ட 2-வது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.ஜி.பிரமோத்குமார் மற்றும் 5பேருக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் நேற்று கோவை 2-வது கூடுதல் சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில்,  இரண்டாவது முறையாக தொடர்ந்து ஐஜி பிரமோத்குமார் ஆஜராகவில்லை.

இதனையடுத்து பிரோமோத் குமாருக்கு எதிராக பிடிவாரண்டை பிறப்பித்த நீதிபதி, பிரமோத் குமாரை 27ஆம் தேதி ஆஜர்படுத்த சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பிரமோத்குமார் கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் தற்போது பணிந்து புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபி.காமராஜ்

Tags :
Advertisement