For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#BANvsWI | கடைசி ஒருநாள் போட்டி... வங்காளதேச அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்!

07:59 AM Dec 13, 2024 IST | Web Editor
 banvswi   கடைசி ஒருநாள் போட்டி    வங்காளதேச அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்
Advertisement

வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்களிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (டிச.12) நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது . வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி தரப்பில் மஹ்மதுல்லா 84 ரன்களும் , மெஹிதி ஹசன் 77 ரன்களும், சவுமியா சர்கார் 73 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இறுதியில் 45.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அமீர் ஜாங்கு சதமடித்து அசத்தினார். கீசி கார்டி 95 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.

Advertisement