பெங்களூர் Vs கொல்கத்தா - மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று(மே.17) மீண்டும் தொடங்கவுள்ளது. தொடர்ந்து மீதமுள்ள லீக் மற்றும் பிளே ஆஃப் போட்டிகள் வருகிற ஜுன் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி சின்னசுவாமி மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே பெங்களூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், தற்போதும் மழை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் மழையின் காரணமாக இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் மழை நின்று போட்டி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் அணி ஏற்கெனவே 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது, இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.