பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவ விழா தொடக்கம்!
திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று முதல் தொடங்கி 13 நாட்கள் நடைபெறும்.
விழாவின் சிறப்பாக தினந்தோறும் பச்சை மயில் வாகனம், தொட்டி உற்சவம், நாக வாகனம், தங்கமயில் வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
முக்கிய விழாவாக வருகிற 29 ஆம் தேதி தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். தொடர்ந்து வருகிற மே 1ஆம் தேதி ஏழாம் நாள் விழாவாக தேரோட்டம் நடைபெறுகிறது. சித்திரை பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாலாஜி, பரம்பரை அரங்காவலர் AD ராஜசேகர் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.