தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 90 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு பாலாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரம் ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 5000 லிட்டர் கொண்டு பாலாபிஷேகம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திரு.வி.க. வீதியில் புகழ் பெற்ற ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 90 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை ஒன்று அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று ஆஞ்சநேய சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.
அந்த வகையில், நடப்பாண்டில் சித்திரை மாதம் முதல் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, 18-வது ஆண்டாக இன்று ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமிக்கு காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பாலாபிஷேகம் நடைபெற்றது. தொட்டிகளில் சுமார் 5000 லிட்டர் பால் கொட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், குழாய் மூலம் மேலே ஏற்றப்பட்டு ஆஞ்சநேயர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினியின் சிலைக்குப் பூஜை செய்து வழிபட்ட தீவிர ரசிகர்!
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும், இந்த கோயிலில் ஆண்டுதோறும் லட்சதீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான லட்சதீப திருவிழா இன்று மாலை முதல் அடுத்த 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது.