பக்ரீத் பண்டிகை.. தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - நாகர்கோவில் இடையே இன்று, நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களிலும் மற்றும் வார இறுதி நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பக்ரீத் பண்டிகையையொட்டி தாம்பரம் நாகர்கோவில் இடையே இன்றும், நாளை மறுநாளும்(ஜூன் 16) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடைகிறது. மறுமார்க்கமாக நாகர்கோவில் இருந்து நாளை (ஜூன் 15) பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் ரயிலானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.
அதேபோல், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கும், பின்னர் மறுமார்க்கமாக நாகர்கோவிலிருந்து 17-ம் தேதி புறப்பட்டு திங்கட்கிழமை(ஜூன் 18) தாம்பரத்தையும் சிறப்பு ரயில் வந்தடைகிறது.