For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கும் ‘பேட் கேர்ள்’ டீசர்!

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் வெளியானது.
06:16 PM Jan 26, 2025 IST | Web Editor
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் வெளியானது.
வெற்றிமாறன்  அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கும் ‘பேட் கேர்ள்’ டீசர்
Advertisement

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பேட் கேர்ள்’. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

அமித் திரிவேதி இசையமைப்பில் வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கும் இப்படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பதின்பருவத்தில் ஒரு பெண்ணின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படமானது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 54 வது பதிப்பில் நடைபெறும் போட்டியில் திரையிடப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement