For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா: 22-ந் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை!

03:55 PM Jan 18, 2024 IST | Web Editor
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா  22 ந் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை
Advertisement

அயோத்தி ராமர் கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ஜனவரி 22-ம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலங்களுக்கும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அயோத்தி ராமர் கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தவிர எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, அன்றைய நாளில் மாநில கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில முதலமைச்சர் யோகி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ஜனவரி 22-ம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலங்கள், மத்திய அரசு நிறுவனங்கள், மத்திய அரசு கல்வி நிலையங்களுக்கும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் பிற்பகல் 2:30 மணிவரை செயல்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement