For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அயோத்தி ராமர் கோயில் - கடந்து வந்த பாதை...!

10:40 AM Jan 20, 2024 IST | Web Editor
அயோத்தி ராமர் கோயில்   கடந்து வந்த பாதை
Advertisement

அயோத்தி ராமா் கோயிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா நாளை மறுநாள் கோலாகலமாக (22.01.2024) நடைபெற உள்ளது. இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் விவகாரம் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.

Advertisement

  • 1528 -ஆம் ஆண்டு அயோத்தியில், மொகலாய மன்னர் பாபர் மசூதியைக் கட்டினார்
  • 1853 - மசூதி கட்டப்பட்ட இடத்திற்கு உரிமை கோரி இந்து- முஸ்லிம்கள் இடையே மோதல்
  • 1859 - மசூதி கட்டப்பட்ட இடத்திற்கு இரு மதத்தினரும் செல்லலாம் என சமரசம்
  • 1885 - ராமர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் விதானம் அமைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஃபைசாபாத் நீதிமன்றம்
  • 1949 - மசூதிக்குள் ராமர், சீதை சிலைகள் மர்மமான முறையில் வைக்கப்பட்டதால் மீண்டும் பதற்றம்
  • 1959 - சம்பந்தப்பட்ட இடத்தில் வழிபாடு நடத்த உரிமை கோரி இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு
  • 1962 - உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சன்னி வக்ஃபு வாரியம், மசூதி தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடியது
  • 1984 - பிரதமர் ராஜீவ் காந்தி, சம்பந்தப்பட்ட இடத்தில் இந்துக்கள் வழிபடலாம் என்று அனுமதி கொடுத்தார்
  • 1985 - அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட புதிய இயக்கத்தை தொடங்கியது விஷ்வ இந்து பரிஷத்
  • 1990 - ராமர் கோயிலுக்காக அத்வானி ரத யாத்திரை - பீகாரில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது

  • 1992 - கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது
  • 1994 - பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க நீதிபதி லிபரான் தலைமையில் ஆணையம்
  • 2002 - பாபர் மசூதி இடிப்பு குறித்த வழக்குகள் அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணை
  • 2003 - மசூதியின் கீழ் பகுதியில் கோயில் இருந்ததாக தொல்லியல் துறை அறிக்கை
  • 2010 - மசூதி இடிக்கப்பட்ட இடத்தை வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா அமைப்புகளுக்கு பிரித்து அளிக்க அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு
  • 2011-2019 - அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அனைத்து அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
  • 2019 - மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
  • 2020 - பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை
  • 2024 - அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை
Tags :
Advertisement