அயோத்தி ராமர் கோயில் விழா! 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ள பிரதமர் மோடி!
அயோத்தி ராமர் கோயில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற உள்ள நிலையில், அதற்காக 11 நாட்கள் விரதத்தை தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகிற 22-ந்தேதி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில், 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தனது X தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு தனது யூ டியூப் பக்கத்தில் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
தனது யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆடியோவில் பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது:
அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கு இன்னும் 11 நாட்கள் உள்ளன. இந்த புனிதமான விழாவில் நான் இருப்பது அதிர்ஷ்டம். இந்த விழாவின்போது நாட்டின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த கடவுள் என்னை உருவாக்கியுள்ளார்.
இதை மனதில் வைத்து 11 நாள் சிறப்பு விரதத்தை தொடங்கியுள்ளேன். நான் உணர்ச்சிவசப் படுகிறேன். என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற உணர்வை அனுபவிப்பது இதுவே முதல்முறை. இந்த நேரத்தில் ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்துவது கடினம். ஆனால், நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். மக்களிடம் இருந்து ஆசீர்வாதத்தை நாடுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி ஆடியோவில் தெரிவித்துள்ளார்.
अयोध्या में रामलला की प्राण प्रतिष्ठा में केवल 11 दिन ही बचे हैं।
मेरा सौभाग्य है कि मैं भी इस पुण्य अवसर का साक्षी बनूंगा।
प्रभु ने मुझे प्राण प्रतिष्ठा के दौरान, सभी भारतवासियों का प्रतिनिधित्व करने का निमित्त बनाया है।
इसे ध्यान में रखते हुए मैं आज से 11 दिन का विशेष…
— Narendra Modi (@narendramodi) January 12, 2024