Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அயோத்தி ராமர் கோயிலுக்கு 28 மொழிகளில் பெயர் பலகை வைக்கும் மாவட்ட நிர்வாகம்!

07:29 PM Jan 12, 2024 IST | Web Editor
Advertisement

அயோத்தியில் ராமர் கோயில் குறித்து நகர் முழுவதும் முக்கிய இடங்களில் 22 இந்திய மற்றும் 6 வெளிநாட்டு மொழிகளில் பெயர் பலகை வைக்கும் பணியில் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து மக்கள் அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்கள் வசதிக்கு ஏற்ப 28 மொழிகளில் பெயர் பலகையை அயோத்தி மாவட்ட நிர்வாகம் வைத்துள்ளனர். இந்த பலகையில் 28 மொழிகளில் - 22 இந்திய மற்றும் 6 வெளிநாட்டு மொழிகளில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு மொழிகளில் அரபு, சீனம், பிரஞ்சு, ஆங்கிலம், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் ஆகியவை அடங்கும். மேலும் இந்திய மொழிகள் இந்தி, உருது, அசாமி, ஒரியா, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, குஜராத்தி, டோக்ரி, தமிழ், தெலுங்கு, நேபாளீஸ், பஞ்சாபி, பங்களா, போடோ, மணிப்பூரி, மராத்தி, மலையாளம், மைதிலி, சந்தாலி, சமஸ்கிருதம் மற்றும் சிந்தி. இதுவரை, ஹனுமான் கர்ஹி, கனக் பவன், ராம் கி பாடி, அயோத்தி தாம் சந்திப்பு, தேதி பஜார் மற்றும் அயோத்தி விமான நிலையம் ஆகிய முக்கிய இடங்களில் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன, அதே நேரத்தில் மற்ற நியமிக்கப்பட்ட இடங்களில் அவற்றை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் 22-ம் தேதிக்குள் முடிவடையும் என அயோத்தி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
28 LanguagesAyodhyaayothiBJPNameBoardnews7 tamilNews7 Tamil UpdatesPMO IndiaRam Janm bhoomiRam LallaRam Mandirram temple
Advertisement
Next Article