For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வசூலை குவித்த அயலான்.. தயாராகிறது 2-ம் பாகம்!

12:26 PM Jan 23, 2024 IST | Web Editor
வசூலை குவித்த அயலான்   தயாராகிறது 2 ம் பாகம்
Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான,  தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ஆகிய இரண்டு படங்களுமே,  இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களாகும்.  இந்த இரண்டு திரைப்படங்களும் அவற்றின் வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதைக்களத்தால் ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகின்றன.

ஒரு தரப்பினர் இந்த இரு படங்களுக்குமே பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில்,  மற்றொரு தரப்பினர் நெகடிவ் விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். இதையடுத்து,  பெரிதும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான ‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் திரைக்கு வந்த முதல்நாளில் நல்ல வசூலைப் பெற்றிருந்தன. இந்நிலையில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 10 நாட்களில் உலகளவில் ரூ.78 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அயலான்’ திரைப்படம் 4 ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருந்து திரைக்கு வந்த திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.  இத்திரைப்படம் குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.  இந்நிலையில்,  படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதையடுத்து விஎஃப்எக்ஸ் பணிகளுக்கு 50 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement