For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அயலான் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

03:04 PM Jan 03, 2024 IST | Web Editor
அயலான் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Advertisement

ரவிக்குமாா் இயக்கத்தில் உருவான அயலான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

‘இன்று நேற்று நாளை’ புகழ் இயக்குநர் ரவிக்குமாரின் 2-வது திரைப்படம் அயலான்.  நடிகர் சிவகார்த்திகேயன்,  ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  பான் இந்தியா படமாக வெளிவரவுள்ள இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும்,  4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்டு ஒரு முழு ஆக்ஷன் படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. படம் ஜனவரி 12ம் தேதி வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. ஜன.5 ம்தேதி அயலான் ட்ரைலரை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement