அயலான் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அயலான் திரைப்படத்தின் வசூல் கடந்த 10 நாட்களில் உலகளவில் ரூ.78 கோடிக்கு அதிகமாக வசூலித்தாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான, தனுஷின் 'கேப்டன் மில்லர்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' ஆகிய இரண்டு படங்களுமே, இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களாகும். அதனைத்தொடர்ந்து, இந்த இரண்டு திரைப்படங்களும் அவற்றின் வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதைக்களத்தால் ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறது. ஒரு தரப்பினர் இந்த இரு படங்களுக்குமே பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் நெகடிவ் விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள்.
இதையும் படியுங்கள் : அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக மனு தாக்கல்!
இதையடுத்து, பெரிதும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான 'அயலான்' மற்றும் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் திரைக்கு வந்த முதல்நாளில் நல்ல வசூலைப் பெற்றிருந்தன. இந்நிலையில், அருண் விஜய்யின் 'மிஷன்' திரைப்படத்திற்கு அதிக திரைகள் கிடைக்காததால் அதன் வசூலில் பாதிப்பு இருந்தது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில் 'மிஷன்' திரைப்படத்துக்கு திரைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், 'அயலான்' திரைப்படம் கடந்த 10 நாட்களில் உலகளவில் ரூ.78 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாகவும் மற்றும் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் ரூ.70 கோடியை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 'மிஷன்' திரைப்படம் ரூ.26 கோடியை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அயலான்' திரைப்படம் 4 ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருந்து திரைக்கு வந்த திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்த திரைப்படம் வெளியான பின், குழந்தைகளிடம் வரவேற்பைப் பெற்றதால் வசூலில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.