For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘மை டீமன்’ நாயகர்களுக்கு விருது - SBS ட்ராமா அவார்ட்ஸில் ஜொலித்த சொங் கங், கிம் யூ ஜங்

02:39 PM Jan 03, 2024 IST | Jeni
‘மை டீமன்’ நாயகர்களுக்கு விருது   sbs ட்ராமா அவார்ட்ஸில் ஜொலித்த சொங் கங்  கிம் யூ ஜங்
Advertisement

SBS ட்ராமா விருதுகள் 2023-ல், ‘மை டீமன்’ தொடர் கதாநாயகன் சொங் கங் மற்றும் கதாநாயகி கிம் யூ ஜங் விருது வென்று அசத்தியுள்ளனர்.

Advertisement

தென்கொரியாவின் சியோல் நகரில் SBS ட்ராமா விருதுகள் 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. தென்கொரிய நாடகங்கள்/தொடர்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கலைஞர்களுக்கு பல்வேறு பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘மை டீமன்’ தொடருக்காக, 'Top Excellence Award (Romance)' மற்றும் 'Best Couple' ஆகிய விருதுகளை, அதன் கதாநாயகன் சொங் கங் மற்றும் கதாநாயகி கிம் யூ ஜங் ஆகிய இருவரும் பெற்று அசத்தியுள்ளனர்.

'Top Excellence Award (Multi-Series)' என்ற பிரிவில், ‘டாக்டர். ரொமாண்டிக் 3’ தொடருக்காக அன் ஹியோ சொப் மற்றும் லீ சங் கியுங் விருதினை வென்றனர். அதேபோல், ‘Excellence Award (Multi- Season Series)’ பிரிவில், ‘டாக்சி டிரைவர் 2’ தொடருக்காக ஷின் ஜே ஹா மற்றும் பியோ யே ஜின் ஆகியோர் விருது வென்றனர்.

இதையும் படியுங்கள் : மக்களவை தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் வெளியீடு..?

ரியோயுன், ஷின் யே யுன், லீ ஜூன், ஹொங் கியுங், லீ யூ பி, ஜின் சன் கியூ, பே யூ ராம், ஜங் ஹியுக் ஜின், சொன் ஜி யூன், ஜங் சூன் வோன், சியோ ஜங் யோன், கிம் வோன் ஹே, கோ சங் ஹோ, பியுன் ஜூங் ஹீ, சாய் ஹியுன் ஜின், ஹன் ஜி அன், பார்க் சோ யி, அன் சே ஹும் ஆகியோரும் SBS ட்ராமா விருதுகள் 2023-ல் வெவ்வேறு பிரிவுகளில் விருது வென்றுள்ளனர்.

Tags :
Advertisement