வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற வங்கதேச முன்னாள் அமைச்சர் ஜுனைத் அகமது கைது!
வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற ஜுனைத் அகமதை வங்கதேச ராணுவத்தினர், டாக்கா விமான நிலையத்தில் கைது செய்தனர்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தையடுத்து அந்நாட்டுப் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா நேற்று (05.08.2024) ராஜிநாமா செய்தார். மேலும் இந்த பரபரப்பான சூழலில் வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் முகமது ஷக்ஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்த நாட்டு அதிபர் முகம்மது ஷஹாபுதீன் உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள் : பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி – அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!
இந்நிலையில், வங்கதேசத்தின் முன்னாள் அமைச்சரும், அவாமி லீக் தலைவருமான ஜுனைத் அகமது வெளிநாடு தப்பிச்செல்ல முயல்வதாக தகவல்கள் வெளியான நிலையில், டாக்கா விமான நிலையத்தில் வைத்து தற்போது ராணுவத்தால் ஜுனைத் அகமது கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.