ஆவேஷம் ரீமேக்: ஃபகத் ஃபாசிலாக பாலைய்யா?
ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான ஆவேஷம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பகத் பாசில் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான ஆவேசம் திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து வெற்றிநடை போட்டது. 2024-ம் ஆண்டு யாருக்கு சிறப்பாக அமைந்ததோ இல்லையோ மலையாள திரையுலகிற்கு சிறப்பாக அமைந்துள்ளது. நடப்பாண்டில் வெளியான பிரேமலு, பிரமயுகம், மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற திரைப்படங்கள் மலையாளம் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படங்களாக உருவெடுத்துள்ளது .
அந்தவகையில் பகத் பாசில் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ஆவேசம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இளம் வயதினர் அதிகம் கொண்டாடினர். இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதுவே, நடிகர் ஃபஹத் ஃபாசிலின் அதிகம் வசூலித்த படமாகும். ஓடிடியில் வெளியாகியும் பரவலான கவனத்தைப் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாகவும் நாயகனாக நடிகர் பாலகிருஷ்ணா நடிக்க உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆவேஷம் ரீமேக் படத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் தகவல் ஃபஹத் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.