ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறினார் அரினா சபலேன்கா!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறினார் அரினா சபலேன்கா
07:15 PM Jan 21, 2025 IST | Web Editor
Advertisement 
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிற ஓபன் டென்னிஸ் போட்டியில் பெலாரசைச் சேர்ந்த அரினா சபலேன்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.
Advertisement 
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று காலிறுதி சுற்று நடைபெற்றது.
அதில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா, ரஷ்ய வீராங்கனை அனஸ்டசியா உடன் மோதினார். இதில் அரினா சபலென்கா 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் அனஸ்டசியாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் சபலென்கா,ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா உடன் மோத உள்ளார்.
 
  
  
  
  
  
 