மாணவர்கள் கவனத்திற்கு... முன்கூட்டியே வெளியாகும் +2 தேர்வு முடிவுகள் - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக நாளை மறுநாள் (மே.8) தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார். 25ஆம் தேதிவரை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதியுள்ளனர். கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடிவுகள் மே 6 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு முடிவுகள் மே 10 ஆம் தேதியும் வெளியானது.
ஆனால் இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதியும், 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதியும் வெளியிட பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் மே 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.