பயணிகள் கவனத்திற்கு... சென்னையில் 18 புறநகர் ரயில்கள் இன்று ரத்து!
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரயில் இருந்து வருகிறது. மின்சார ரயில்களில் தினசரி லட்சகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது சென்னை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Line Block/Signal Block is permitted in #Chennai Central – #Gudur section between #Kavaraipettai and #Ponneri Railway Stations on 20th March 2025.
Passengers, kindly take note.#RailwayAlert pic.twitter.com/dnB8Rho7qK
— DRM Chennai (@DrmChennai) March 20, 2025
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
"பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பகல் 1.20 முதல் மாலை 5.20 வரை 4 மணிநேரம் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக காலை 10.15 முதல் மாலை 4.30 மணிவரை இந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் 16 புறநகர் ரயில்கள் முழுமையாகவும், இரண்டு ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்படுகிறதுது. இதற்கு மாற்று ஏற்பாடாக பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன"
இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.