ஏடிஎம் பயனாளர்கள் கவனத்திற்கு - அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்த ரிசர்வ் வங்கி!
ஏடிஎம் கட்டணங்கள் குறித்த புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏடிஎம்-களை பயன்படுத்தினால் ரூ. 23 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு உள்ள ஏடிஎம்-களை கட்டணமின்றி ஒரு மாதத்திற்கு 5 முறை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்ற வங்கி ஏடிஎம்-களை பண பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு இடத்திற்கு தகுந்தாற்போல் கட்டணமின்றி குறிப்பிட்ட அளவு பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ சிட்டியில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் மூன்று முறை இலவசமாக ஏடிஎம்-களை பயன்படுத்தி கொள்ளாலாம் என்றும் பெருநகரம் அல்லாத பகுதியில் வசிக்கும் வாடிக்கையாளர் இலவசமாக ஐந்து முறை இலவச ஏடிஎம்-களில் பணபரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்த இலவச வரம்புகளை தாண்டி ஒரு பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவோரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 23 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இதில் பணம் எடுப்பதும், பண இருக்கிறதா? என சரிபார்ப்பதும் அடங்கும். இந்த நடைமுறை நாளையில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. ஏற்கெனவே மற்ற ஏடிஎம் மிஷன்களை பயன்படுத்தினால் ரூ.21 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 2 அதிகரித்துள்ளது.