For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போராட்டத்தை தடுக்க சென்ற பெண் #DSP மீது திடீர் தாக்குதல்! நடந்தது என்ன?

02:28 PM Sep 03, 2024 IST | Web Editor
போராட்டத்தை தடுக்க சென்ற பெண்  dsp மீது திடீர் தாக்குதல்  நடந்தது என்ன
Advertisement

அருப்புக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுக்கச் சென்ற, பெண் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஓட்டுநர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது டிஎஸ்பி காயத்ரி அவர்களை தடுக்க முயன்றதால். டிஎஸ்பி மீது தாக்குதல் போலீசார் போராட்டக்காரர்கள் இடையே மோதல் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் (33). இவர் சரக்கு வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். நேற்று காளிக்குமார் சரக்கு வாகனத்தில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி - ராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல், காளிக்குமாரை சுற்றி வளைத்துள்ளது.

தொடர்ந்து அரிவாளால் காளிக்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதனையடுத்து படுகாயம் அடைந்த காளிக்குமாரை மீட்டு, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.‌ காளிக்குமார் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமார் உறவினர்கள் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்‌.

தொடர்ந்து அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.‌ அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. அப்போது ஒருவர் டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை இழுத்து, அவர்மேல் தாக்குதல் நடத்தினார். இதனால் பதட்டமான சூழல் நிலவியது. போராட்டக்காரர்கள் அதிக அளவில் இருந்ததால், போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தொடர்ந்து போலீசாரை மீறி காளிக்குமாரின் உறவினர்கள் திருச்சுழி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

Tags :
Advertisement